Friday, March 12, 2010

சொல்லடி

சொல்லாடி சொன்னடி சொல்லடி
சொல்லிலடித்தது ஏனடி
என்னையே எண்ணியே சொன்னியா
சொன்னதெல்லாம் உண்மையா
உனக்குள் நான் இனி இல்லையா
உறவை முறிப்பது தன்மையா

வெறுந்தாளாய் பறந்த என்னில்
கவிதை உன்னை எழுதிவைத்தேன்
அன்றோ ரசித்து படித்தவள் நீ
இன்றோ கிழித்து எறிந்தவள் நீ
கவியரங்கே கருத்தரங்கில்
கண்ட குறை என்ன கண்ணே
செந்தமிழே சங்கமத்தில்
சந்திப்பிழை கண்டாயோ
சொந்தமில்லை என்றாயோ


குரல் மொழியில் கீரனாகி
பொருட்குறை கண்டு நீயும்
கருவிழியில் கண்ணகியாய்
பந்தமில்லை என்று சொல்லி
பாண்டிசபையாக்கிச் சென்றாய்
பொறுமை உனக்கில்லையடி
வெறுமை எனை சேர்ந்ததடி
வெந்து நொந்தேன் - சொன்ன நொடி


துர்வாசர் வார்த்தையாலே
துஷ்யந்தனாகி நீயும்
துக்கத்தை தூக்கி தந்தே
சகுந்தலையாய் சாய்த்ததேனோ
மறக்கடி என்ற-அடி சொன்ன நொடி
மனம் கல்லடி-கண்ணாடி ஆனதடி
என் தசையடி
கசையடி தாங்குமடி
உன் வசையடி
விசையடி மாய்க்குதடி

No comments:

Post a Comment