Monday, September 27, 2010

செம்மொழியே செம்மொழியே

செம்மொழியே
செம்மொழியே - உன்
செவ்விய செழுமையில்
திளைத்து வந்தேன்

மொழிநடையில்
உன் இளநடையில்
உன்பின் நடைபோட
நானும் வந்தேன்

உயிர்மெய் கலந்து
உன்னுள் இணைந்து
வாழ்வின் சரிதம்
எழுத வந்தேன்

வெறுந்தாள் நானும்
உன்தாழ் இணைந்து
செய்தித் தாளாக
பரவ வந்தேன்

ஆவணம் போலே
ஆண்டுருண்டலும்
உன்பெயர்ச் சொல்லில்
நிலைக்க வந்தேன்

No comments:

Post a Comment